வெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவு: மாயமான 56 பேரின் கதி என்ன?


வெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவு: மாயமான 56 பேரின் கதி என்ன?
x
தினத்தந்தி 11 Oct 2022 8:48 PM GMT (Updated: 12 Oct 2022 8:45 AM GMT)

வெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி மாயமான 56 பேரின் கதி என்ன என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரகஸ்,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியது. கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த சூழலில், வெனிசுலாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அரகுவா மாகாணத்தில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மாயமான 56 பேரின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.


Next Story