ஐதராபாத்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்


ஐதராபாத்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்
x

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத் அருகெ மெஹிதிபட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது. இதனிடையே மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரையும் மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story