சிக்கமகளூருவில் ஒரேநாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்


சிக்கமகளூருவில்  ஒரேநாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 14 April 2023 6:45 PM GMT (Updated: 14 April 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் ஒரேநாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சிக்கமகளூரு-

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூருவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 5 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது 3 பேர் மொத்தம் 5 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் சிருங்கேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஜீவராஜ் கொப்பாவில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்று 3 வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.

கடூரை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. பெள்ளி பிரகாஷ் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தரிகெரே தொகுதியில் போட்டியிட கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்ததாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரமேஷ் தெரிவித்துள்ளார். வருகிற 17-ந் தேதி அன்று சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.


Next Story