தாவணகெரேவில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது


தாவணகெரேவில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2023 6:45 PM GMT (Updated: 6 May 2023 6:46 PM GMT)

தாவணகெரேவில் திருட்டு வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு-

தாவணகெரே மாவட்டம் கே.டி.ஜே. நகர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநகர் மாவட்டம் கூட்லகி தாலுகாவைச் சேர்ந்த ராஜாபூதராஜ்(வயது 28), சதாம்(32), சிக்கமகளூரு மாவட்டம் கடுபுகெரே கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்(26), கிரீஷ்(39) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் தாவணகெரே, ஹாசன், சிக்கமகளூரு உள்பட பல்வேறு ஊர்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக இவர்கள் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை தொழிலாக வைத்திருந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. அதையடுத்து அவர்கள் 4 பேரிடம் இருந்தும் ரூ.39 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story