விவசாயி கொலை வழக்கில் போலீஸ்காரர் உட்பட தலா 3 ஆண்டுகள் சிறை


விவசாயி கொலை வழக்கில்  போலீஸ்காரர் உட்பட தலா 3 ஆண்டுகள் சிறை
x

விவசாயி கொலை வழக்கில் போலீஸ்காரர் உட்பட தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

கலபுரகி: கலபுரகி டவுன் கடபூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்ரித். இவர் மகாகோன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி செய்து வந்தார். இவரது மனைவி வெங்கம்மா. இந்த நிலையில் இவரது மனைவிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சரணபசப்பா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி அறிந்ததும் அம்ரித், மனைவியையும், சரணபசப்பாவையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்த நிலையில், அம்ரித் தனது மனைவி வெங்கம்மா மற்றும் உறவினர் என 3 பேரும் சேர்ந்து சரணபசப்பாவை அங்குள்ள வாழை தோட்டத்துக்கு வரவழைத்து கொலை செய்தனர். அவரது உடலை கால்வாயில் வீசினர்.

இதுகுறித்து கலபுரகி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ரித் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கலபுரகி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது போலீஸ்காரர் அம்ரித், அவரது மனைவி வெங்கம்மா மற்றும் உறவினர் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story