இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது
x

இந்தியாவில் மேலும் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், இரு தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில் மேலும் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

நேற்று பாதிப்பு 10,753- ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு சரிந்துள்ளது

கொரோனாவிற்கு மேலும் 23 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,720-ல் இருந்து 57,742- ஆக உயர்ந்துள்ளது

Next Story