ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; 2 பேர் கைது

சிவமொக்காவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் ஆன்லைன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சிவமொக்காவில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிவமொக்கா டவுன் ஒசமனே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 2 பேர் செல்போன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் சதீஸ் என்பது தெரியவந்தது.
இவர்கள் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்த விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.25.43 லட்சம் பணம், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story