ஜார்கண்ட் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்வு


ஜார்கண்ட் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்வு
x

Image Courtacy: PTI

ஜார்க்கண்ட் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் அம்மாநில மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எஸ்.சி.க்கான இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எஸ்.டி. இடஒதுக்கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12 சதவீதம், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் என மொத்தம் 77 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்குமாறு மத்திய அரசை வற்புறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த மாதம், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னைகளை பரிந்துரைப்பதற்கான குழுவை அமைக்க அம்மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story