தேர்தல் தோல்வி எதிரொலி: மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் அதிரடி மாற்றம்...!


தேர்தல் தோல்வி எதிரொலி: மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் அதிரடி மாற்றம்...!
x

மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவராக கமல்நாத் செயல்பட்டு வந்தார்.

போபால்,

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் 163 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றது. 66 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் தோல்வியடைந்தது.

மேலும், தேர்தல் தோல்வியால் மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியை இழந்தது. இதனை தொடர்ந்து பாஜக ஆட்சியமைத்த நிலையில் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவியேற்றார். அதேவேளை, மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவராக கமல்நாத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் இன்று நீக்கப்பட்டுள்ளார். மேலும், அம்மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். 49 வயதான ஜிது பட்வாரி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அம்மாநில உயர்கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜிது பட்வாரி பாஜக வேட்பாளரிடம் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தற்போது, ஜிது பட்வாரி மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் கட்சி ரீதியில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story