கே.பி.டி.சி.எல். தேர்வு முறைகேடு: 4 பேர் கைது


கே.பி.டி.சி.எல். தேர்வு  முறைகேடு: 4 பேர் கைது
x

கே.பி.டி.சி.எல். தேர்வு முறைகேட்டில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: கர்நாடக மின்பரிமாற்ற கழகத்தின் (கே.பி.டி.சி.எல்.) உதவி என்ஜினீயர்களுக்கு பணிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு நடந்தது. இந்த தேர்வின் போது பெலகாவியில் உள்ள தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. அதாவது தேர்வர்கள் புளூடூத்தை பயன்படுத்தி தேர்வு எழுதியது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் கோகாக் போலீசார் 29 பேரை கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவர்கள் முதலகியை சேர்ந்த மஞ்சுநாத் ராமப்பா, அரபாவியில் வசித்து வரும் மாருதி ராமண்ணா, பக்கீரப்பா, மகாதேவ அனுமந்தா ஆவார்கள். இவர்களில் பிடிபட்டு இருப்பதன் மூலம் கைது எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. தேர்வுக்கு பயன்படுத்தப்பட்ட 189 புளூடூத்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.


Next Story