2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை


2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

கடூரில் 2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு அருகே கடூர் தாலுகா உத்தேபோரனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்றது. பின்னர் அதே தொழுவத்தில் இருந்த ஆட்டு குட்டி ஒன்றை அடித்து கொன்றதுடன், அதை தூக்கி சென்றது. இதற்கிடையில் நள்ளிரவு ஆடுகளில் சத்தம் கேட்டு ரமேஷ் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை ஆட்டை கொன்றுவிட்டு சென்றது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அறித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள் மாநில அரசு சார்பில் இதற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதைகேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டு சென்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story