வாடகை செலுத்தாத இறைச்சி கடைகளுக்கு பூட்டு


வாடகை செலுத்தாத இறைச்சி கடைகளுக்கு பூட்டு
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

சிக்கமகளூரு மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத இறைச்சிகடைகளுக்கு நகரசபை பூட்டு போட்டுள்ளது.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மார்க்கெட் பகுதியில் இறைச்சி, காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை என்று ஏராளமான கடைகள் உள்ளது. இதில் நகரசபைக்கு சொந்தமான கட்டிடங்களும் உள்ளது. இதில் சில இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளில் 10 மேற்பட்ட கடை உரிமையாளர்கள் நகரசபைக்கு முறையாக வாடகை பணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடை உரிமையாளர்களுக்கு நகரசபை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசிற்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த நகரசபை தலைவர் வேணுகோபால் நேரில் சென்று எச்சரிக்கை விடுத்ததுடன், முறையாக வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பூட்டுபோட்டனர். மேலும் முழு வாடகை தொகையையும் செலுத்திய பின்னர்தான் கடையை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் இறைச்சிக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிைலயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் இறைச்சிக்கடை இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோல ராமனஹள்ளி பகுதியில் உள்ள கடைகளில் சட்டவிரோமாக பாலிதீன் பைகள் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அந்த கடைகளில் சோதனை செய்த அதிகாரிகள், பாலிதீன் பைகளை பறிமுதல் செய்ததுடன், கடை உரிமையாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story