புதுச்சேரி சட்டமன்ற நுழைவாயில் அமர்ந்து எம்.எல்.ஏ போராட்டம்


புதுச்சேரி சட்டமன்ற நுழைவாயில் அமர்ந்து எம்.எல்.ஏ போராட்டம்
x

முதல் அமைச்சரை எதிர்த்து வெற்ற பெற்றதால் ஏனாம் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி சட்டப்பேரவை வளாகத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி,

ஏனாம் தொகுதியில் முதல் அமைச்சர் ரங்கசாமியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக், தங்கள் தொகுதியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இந்த நிலையில், முதல் அமைச்சரை கண்டித்து சட்டமன்ற நுழைவுவாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அவர், முதல் அமைச்சரை எதிர்த்து வெற்றிபெற்றதால் ஏனாம் தொகுதியில் எந்த ஒரு அடிப்படை பிரச்சினைகளை இதுவரை தீர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

அவருடன் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாலும், அவற்றை ஏற்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்


Next Story