கொலை வழக்கில் 34 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது


கொலை வழக்கில் 34 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
x

கொலை வழக்கில் 34 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மீரா சாலையில் உள்ள குடியிப்பில் கடந்த 1990ம் ஆண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் சுதாகர் கிருஷ்டன் அமெனா (வயது 22) என்ற இளைஞர் 6 பேர் கொண்ட கும்பலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜகாங்கீர் தின்முகமது ஷேக் என்ற குற்றவாளி தலைமறைவானார். அவரை பல மாதங்களாக போலீசார் தேடிய நிலையில் அவர் பிடிபடாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், 34 ஆண்டுகளுக்கு பின் சுதாகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷேக் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் அந்தேரியில் பதுங்கி வாழ்ந்துவந்த ஷேக்கை போலீசார் கைது செய்தனர். 34 ஆண்டுகளுக்குபின் கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story