கழுத்தை அறுத்து பெயிண்டர் படுகொலை


கழுத்தை அறுத்து பெயிண்டர் படுகொலை
x

மைசூரு அருகே கழுத்தை அறுத்து பெயிண்டர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு:

மைசூரு அருகே கழுத்தை அறுத்து பெயிண்டர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெயிண்டர்

மைசூரு (மாவட்டம்) தாலுகா கேர்ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவா(வயது54). இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். மகாதேவா மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர் தினமும் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வரும்போது மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி அருகே உள்ள கிராமத்திற்கு பெயிண்டிங் வேலைக்கு மகாதேவா சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் மகாதேவாவை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மகாதேவாவை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மகாதேவாவின் மனைவி ஜெயப்புரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில், கேர்ஹள்ளி கிராமம் அருகே உள்ள மதுபானக்கடை முன்பு மகாேதவா கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சம்பவத்தன்று பெயிண்டிங் வேலை முடிந்து சம்பள பணத்தை வாங்கிவிட்டு மகாதேவா கேர்ஹள்ளி மதுபானக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு மதுகுடித்து விட்டு அவர் ெவளியே வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மகாதேவாவிடம் வழிப்பறி செய்ய முயன்றுள்ளனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதில், மகாதேவாவுக்கும், மர்மநபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மர்மநபர்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து மகாதேவாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story