மண்டியாவில் ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டி கொலை


மண்டியாவில் ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டி கொலை
x

மண்டியாவில் நடுரோட்டில் வாலிபரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மண்டியா:

மண்டியாவில் நடுரோட்டில் வாலிபரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓட, ஓட விரட்டி...

மண்டியா டவுன் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய் (வயது 22). இவர் நேற்று காலை 4-வது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 5 பேர், அக்ஷயுடன் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அக்ஷயை வெட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்ஷய், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும், மர்மநபர்கள் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அரிவாளால் வெட்டி கொலை

சுமார் 100 மீட்டர் தூரத்தில் வைத்து அக்ஷயை மர்மநபர்கள் மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நடுரோட்டில் நடந்த இந்த கொடூர கொலையை பார்த்து அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அலறி அடித்து ஓடினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டியா மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான அக்ஷயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் அக்ஷயை படுகொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மண்டியா மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story