கோவா: காதலை தொடர மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற காதலன் கைது
கோவாவில் காதலை தொடர மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்..
பானஜி,
தெற்கு கோவாவில் உள்ள வெல்சான் கடற்கரையில் காதலை தொடர மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த 26 வயதான கிஷன் கலங்குட்கர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவன் கூறுகையில், தானும் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறினார். மேலும் வெல்சான் கடற்கரைக்கு இருவரும் சென்றபோது, அப்பெண் காதலை தொடர விரும்பவில்லை என்றும், இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்றும் கூறினாள். இதனால், ஆத்திரமடைந்து கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்ததாக தெரிவித்தான். மேலும், உடலை கடற்கரையோரம் உள்ள புதரில் வீசி சென்றதாக தெரிவித்தான்.
பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் பிடித்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.