காஷ்மீர்: ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ராணுவ வீரர் பலி


காஷ்மீர்: ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ராணுவ வீரர் பலி
x

காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்து ராணுவ வாகனம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கசலியன் பகுதியில் இன்று ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்தார்.


Next Story