100 பெண்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்வு


100 பெண்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்வு
x

கர்நாடக சட்டசபைக்கு இதுவரை நடந்த தேர்தலில் 100 பெண்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளனர்.

பெங்களூரு:-

நாடு சுதந்திரம் அடைந்த பின்பு கர்நாடகத்திற்கு கடந்த 1952-ம் ஆண்டில் இருந்தே சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 சட்டசபைக்கு தேர்தல் முடிந்து, வருகிற மே மாதம் 10-ந் தேதி 16-வது சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் ஆண்களை போன்று, பெண்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தொடர் முழக்கங்கள் விடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு முன்னுரிமையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆனால் கர்நாடகத்தில் கடந்த 15 சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் இதுவரை 100 பெண்கள் மட்டுமே எம்.எல்.ஏ.களாக தேர்வாகி இருக்கும் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 1,124 பெண்கள் மட்டுமே வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர். அவர்கள் அனைவராலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.களாக ஆக முடியவில்லை. 1,124 பெண்கள் போட்டியிட்டதில், இதுவரை 873 பெண்கள் டெபாசிட் கூட வாங்க முடியாமல் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து சந்தித்து இருந்தனர். மேலும் 100 பெண்கள் மட்டுமே இதுவரை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story