எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு: பாட்னாவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு: பாட்னாவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம் 

எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றதை அடுத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

பாட்னா,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமரவைக்கக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

இந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றதை அடுத்து, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.


Next Story