மாநிலங்களவையில் பீகாருக்கு எதிரான கருத்தை திரும்ப பெற்றார் பியூஷ் கோயல்


மாநிலங்களவையில் பீகாருக்கு எதிரான கருத்தை திரும்ப பெற்றார் பியூஷ் கோயல்
x

கோப்புப்படம்

மாநிலங்களவையில் பீகாருக்கு எதிரான கருத்தை மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் திரும்ப பெற்றார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை ராஷ்டிரீய ஜனதாதள உறுப்பினர் மனோஜ் ஜா பேசுகையில், கார்ப்பரேட் நிறுவனங்களையும், ஏழைகளையும் சமமான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு மத்திய வர்த்தக மந்திரியும், அவை முன்னவருமான பியூஷ் கோயல், ''உங்களிடம் கொடுத்தால், ஒட்டுமொத்த நாட்டையும் பீகாராக மாற்றி விடுவீர்கள்'' என்று கூறினார்.

இதன்மூலம் பீகார் மாநிலத்தை பியூஸ் கோயல் அவமதித்து விட்டதாக சபைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு மனோஜ் ஜா கடிதம் எழுதினார். நேற்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் பியூஸ் கோயல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்தநிலையில், பியூஸ் கோயல் தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டார். மாநிலங்களவையில் அவர் பேசியதாவது:-

பீகாரையோ, அதன் மக்களையோ அவமதிப்பது எனது நோக்கம் அல்ல. அந்த கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால், அதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.


Next Story