நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து


நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து
x
தினத்தந்தி 15 Aug 2023 6:54 AM IST (Updated: 15 Aug 2023 10:59 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;-

"சுதந்திர தின வாழ்த்துகள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story