இஸ்ரேல் தேர்தலில் வெற்றி: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


இஸ்ரேல் தேர்தலில் வெற்றி: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

கோப்புப்படம்

இஸ்ரேல் தேர்தலில் வெற்றி பெற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஜெருசலேம்,

இஸ்ரேலில் நேற்று முன் தினம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும் - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நடந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தேர்தலில் வெற்றி பெற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-இஸ்ரேல் மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்த எங்களின் கூட்டு முயற்சிகளை தொடர எதிர்பார்க்கிறேன்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.




Next Story