மேல்முறையீட்டிற்காக ராகுல்காந்தி செல்வது தேவையில்லாத நாடகம் - மத்திய மந்திரி கிரண் ரீஜிஜூ


மேல்முறையீட்டிற்காக ராகுல்காந்தி செல்வது தேவையில்லாத நாடகம் - மத்திய மந்திரி கிரண் ரீஜிஜூ
x

மேல்முறையீட்டிற்காக ராகுல்காந்தி செல்வது தேவையில்லாத நாடகம் என்று மத்திய மந்திரி கிரண் ரீஜிஜூ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) மேல்முறையீடு செய்கிறார். இதற்காக அவர் குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். ராகுல் காந்தி சூரத் வந்து சேருகிறபோது, அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ராகுல்காந்தி மேல்முறையீடு குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரீஜிஜூ கூறியதாவது:-

"மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் செல்கிறார். ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம். மேல்முறையீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டியம் அவசியம் இல்லை. பொதுவாக, எந்தவொரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. ராகுல் காந்தி செய்யும் மேல்முறையீடு நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும்." என்று கூறியுள்ளார்.


Next Story