கனமழை காரணமாக மத்திய பிரதேசத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
மத்திய பிரதேசத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போபால்,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3-ந்தேதி (நாளை) மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மத்திய பிரதேசத்தில் இன்றைய தினம் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய பிரதேசத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை காரணமாக சில இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறும், பலவீனமான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story