சாலை பணிகளை பார்வையிட்ட ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ


சாலை பணிகளை பார்வையிட்ட ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 1 Dec 2022 8:56 PM GMT (Updated: 1 Dec 2022 8:56 PM GMT)

ஆண்டரசன் பேட்டையில் சாலை பணிகளை ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

கோலார் தங்கவயல்:-

கோலார் தங்கவயலில் உள்ள சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது.. இந்த சாலைகளை புனரமைக்க கோரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா சசிதரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற அவர் மாநில அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி போதிய நிதிகளை பெற்றதுடன், சாலை அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்தினார். அதன்படி முதற்கட்டமாக கோரமண்டல் டோல் கேட், உரிகம் ரெயில் நிலையம், அம்பேத்கர்-ராபர்ட்சன் பேட்டை சாலை வரையிலான சீரமைப்பு பணிகள் நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து 2-வது கட்டமாக ராபர்ட்சன் பேட்ைட சல்டானா சர்க்கிள்-ஆண்டர்சன் பேட்டை வரையிலான சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஆண்டர்சன் பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து, கில்பர்ட்ஸ், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக நடந்து வந்த சீரமைப்புகளை ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ. நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் குத்தகைதாரர்களிடம் தரமான முறையில் சாலைகள் அமைக்கவேண்டும். மேலும் பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆய்வு பணியின் போது நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, வார்டு கவுன்சிலர் சிவாஜிராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story