மருந்தகத்தில் கன்னட புத்தகங்கள் விற்பனை


மருந்தகத்தில் கன்னட புத்தகங்கள் விற்பனை
x

பெங்களூருவில் மருந்தகத்தில் கன்னட புத்தகங்களை விற்பனை செய்வது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:-

முற்காலம் முதலே புத்தகம் படிப்பது மனிதர் மரபுடன் தொடர்ந்து வருகிறது. புத்தகம் படிக்கும் ஆர்வம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமமாக இருக்கிறது. பள்ளி புத்தகங்களை போன்று வரலாறு, கதை, தத்துவ புத்தகங்களும் மக்களால் பெரிதளவில் படிக்கப்பட்டு வருகிறது. இதற்கான உதவி மையமாக நூலகம் உள்ளன. அங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை. எனவே மனித வாழ்வில் புத்தகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. புத்தகங்கள் மீதுள்ள ஆர்வத்தால், பலரும் மற்றவர்களை புத்தகம் படிப்பதற்கு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் மருந்து கடை ஒன்றில் மருந்துகளுக்கு மத்தியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, பெங்களூரு விஜயநகர் பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் அதன் உரிமையாளர் கன்னட புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளார். மருந்தகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கன்னட புத்தகங்களை வாங்கி செல்வதற்கு வசதியாக புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story