இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிவமொக்கா-
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பாலியல் தொல்லை
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா பகுதியை சேர்ந்த வாலிபரும் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் இளம் பெண்ணை, வாலிபர் பல்வேறு இ்டங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் வாலிபர் இளம்பெண்ணை சிவமொக்கா அழைத்து சென்று அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறகூடாது என இளம் பெண்ணை மிரட்டி உள்ளார்.
இந்தநிலையில் இளம்பெண் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் இளம்பெண்ணிடம் கேட்டனர். அப்போது அவர் கதறி அழுதப்படி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோர் மாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
4 ஆண்டு சிறை
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.