அயோத்தி ராமர் கோவிலில் மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே வழிபாடு


அயோத்தி ராமர் கோவிலில் மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே வழிபாடு
x

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

இதனிடையே மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்த ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்றதும் விரைவில் அயோத்தி சென்று ராமரை வழிபடுவேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கட்சியின் மூத்த எம்.பி,க்கள், எல்.எல்.ஏ.க்கள் அயோத்தி சென்றனர்.

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது ஏக்நாத் ஷிண்டோ அங்கு சரயு நதியில் பூஜை செய்தார். பின்னர் அயோத்தியில ராமர் கோவில் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் சென்று பார்வையிட்டார்.


Next Story