சிவமொக்கா பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலையில் கைதானவருக்கு ஜாமீன்


சிவமொக்கா பஜ்ரங்தள பிரமுகர்  ஹர்ஷா கொலையில் கைதானவருக்கு ஜாமீன்
x

சிவமொக்கா பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலையில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: சிவமொக்காவை சேர்ந்த பஜ்ரங்தள பிரமுகரான ஹர்ஷா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் என்.ஐ.ஏ. போலீசார் 10 பேரை கைது செய்து உள்ளனர். அதில் ஒருவர் பெயர் சையத் நசீம். இவர் ஹர்ஷாவை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைதாகி இருந்தார்.

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் சையத் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கங்காதர் முன்பு நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சையத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story