மெட்ரோ கட்டுமான பணிகளை பாருங்கள், அதன்பின் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த மாட்டீர்கள்- பிரதமர் மோடி
மெட்ரோ கட்டுமான முறை பற்றி அறிந்த பிறகு மாண்வர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த மாட்டார்கள் என்று பிரதமர் கூறினார்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி 2வது நாளாக இன்று காலை மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரெயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
காந்திநகர்-மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரெயிலில், ரெயில்வே ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களுடன் அகமதாபாத் வரை பிரதமர் பயணம் செய்து மகிழ்ந்தார். இந்த தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்கள், மெட்ரோ பணிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த மெட்ரோ ரெயில் பணிக்களுக்காக ஏற்படும் செலவு, சுரங்கப்பாதைகள் அமைத்தல் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
மெட்ரோ கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள செயல்முறை பற்றி மாண்வர்கள் அறிந்த பிறகு பொதுச் சொத்துக்களை அழிக்கும் எந்தப் போராட்டத்திலும் மாணவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று பிரதமர் மேலும் கூறினார். அது அவர்களுக்கு தங்களின் சொந்த சொத்துக்கள் சேதபடுத்தும் வலியை ஏற்படுத்தும் என மோடி கூறினார்.