சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றும் வரை போராட்டம் தொடரும்
சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் மற்றும் முக்கா பகுதிகளில் 2 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. அருகருகே உள்ள 2 சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடந்த 20 நாளாக காங்கிரஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்ட குழுவினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில் 21-வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி., விரைவில் முக்கா சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த போராட்ட குழுவினர் சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.