விபத்தில் சிக்கியவருக்கு உதவிய பெண் எம்.எல்.ஏ.
விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்த எம்.எல்.ஏ பூர்ணிமாவிற்கு பாராட்டுகள் குவிக்கிறது.
சிக்கமகளூரு:-
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் உள்ள வாணி விலாஸ் அணையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பாகினா பூஜை செய்தார். இந்த நிகழ்ச்சியில் இரியூர் தொகுதியை சேர்ந்த பூர்ணிமா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இந்த விழா முடிந்ததும் பூர்ணிமா எம்.எல்.ஏ. வீட்டுக்கு திரும்பி சென்றார். அப்போது அவர், இரியூர் செல்லும் சாைலயில் அவர் வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோ ஒன்று விபத்தில் சிக்கி சாலையில் கவிழ்ந்து கிடந்தது. இதை பார்த்த பூர்ணிமா எம்.எல்.ஏ. தனது காரில் இருந்து உடனே கீழே இறங்கி அந்த ஆட்டோவில் இருந்த டிரைவரை தனது உதவியாளர் மூலம் மீட்டார். பின்னர் தனது காரிலேயே அவரை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூர்ணிமா எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.