ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே


ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 16 March 2024 5:50 PM IST (Updated: 16 March 2024 5:51 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் , ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக 'இந்திய மக்களாகிய நாங்கள்' ஒன்று சேர்ந்து போராடுவோம். என தெரிவித்துள்ளார்.


Next Story