ஸ்கூட்டர் மீது லாரி மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி


ஸ்கூட்டர் மீது லாரி மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி
x

மங்களூருவில், ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 2 குழந்தைகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன.

மங்களூரு-

ஸ்கூட்டர் மீது லாரி மோதல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஜெப்பு தண்டோலியை சேர்ந்தவர் கங்காதர்(வயது 45). இதேபோல் கொனாஜே பஜீர் பகுதியை சேர்ந்தவர் நேத்ராவதி. இவரது மகள் மோக்‌ஷா(4). மேலும் சகோதரியின் மகன் ஞானேஷ்(6). இதில் கங்காதரும், நேத்ராவதியும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஸ்கூட்டரில் கங்காதர், நேத்ராவதி மற்றும் 2 குழந்தைகளை வெளியே அழைத்து சென்றுள்ளார். கல்லாப்பு காய்கறி மார்க்கெட் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி ஒன்று இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கங்காதர், நேத்ராவதி ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மோக்‌ஷா, ஞானேஷ் ஆகிய 2 குழந்தைகளும்

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், 2 குழந்தைகளையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தேரளகட்டேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான கங்காதர், நேத்ராவதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அனீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story