மலேசியாவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணம்


மலேசியாவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணம்
x

மலேசியாவுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கோலாலம்பூர்,

மலேசியா நாட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுபற்றி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தின் பகுதியாக, மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரை இன்று சென்றடைவேன்.

இதன்பின், அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி தத்தோ செரி முகமது ஹசனை நேரில் சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தும் ஆவலோடு இருக்கிறேன்.

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள இருக்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story