குடும்ப பிரச்சினைக்கு பழிவாங்க விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து உறவுக்கார சிறுவனை கொன்ற பெண்


குடும்ப பிரச்சினைக்கு பழிவாங்க விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து உறவுக்கார சிறுவனை கொன்ற பெண்
x

12 வயதான உறவுக்கார சிறுவனுக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அரிக்குளம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஹசன் ரிபாய் (வயது 12). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் திங்கட்கிழமை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேதபரிசோதனையில் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிறுவனின் உறவுக்காரரான தஹிரா (வயது 34) என்ற பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தஹிராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக சிறுவன் ஹசன் ரிபாயின் தாயார் உள்பட குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக கடையில் ஐஸ்கிரீம் வாங்கிவந்து அதில் விஷம் கலந்து ஹசன் வீட்டில் கொடுத்துள்ளார். வீட்டில் ஹசன் மட்டுமே இருந்துள்ளதால் அவர் விஷம் கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளார். இதில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடும்ப பிரச்சினை காரணமாக உறவுக்கார சிறுவனை ஐஸ்கிரீமில் விஷம் கொடுத்து கொலை செய்த தஹிராவை போலீசார் கைது செய்தனர்.


Next Story