அரசியல்வாதிகள் வளர்ச்சி பணிகளில் முறைகேடு செய்கிறார்கள்- சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பேச்சு


அரசியல்வாதிகள் வளர்ச்சி பணிகளில் முறைகேடு செய்கிறார்கள்-  சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பேச்சு
x

தேர்தல் நேரத்தில் பணம் வாரி இரைக்கும் அரசியல்வாதிகள் வெற்றிபெற்ற பிறகு வளர்ச்சிப்பணிகள் செய்வதில் முறைகேடு செய்கிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கோபாலகவுடா தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி

கோலாரில் பல்வேறு சமூக அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி கோபாலகவுடா கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:-

சாதாரண கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர் ரூ.10 கோடிக்கு மேல் செலவு செய்கிறார்கள். மாநகராட்சிகளில் போட்டியிடுவோர் ரூ.20 கோடிக்கு மேல் செலவு செய்கிறார்கள். அனைத்து தேர்தல்களிலும் அரசியல்வாதிகள் பணத்தை வீணாக செலவு செய்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்களை வாரி இரைக்கின்றனர்.

ஆனால் வெற்றி பெற்றப்பின் வளர்ச்சி பணிகள் செய்வதில் முறைகேடுவில் ஈடுப்பட்டு பல கோடி ரூபாய் சம்பாதிக்கார்கள் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்வதில்லை. அத்துடன் அரசு அறிவிக்ககும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அமல்படுத்தாமல் அதற்கான நிதியை கொள்ளை அடிக்கிறார்கள். எனவே தான் தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதிகள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறிவிடுகிறார்கள்.

உணர வேண்டும்இந்த நிலை மாற்வேண்டும் என்றால் மக்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பணம் வாங்குவதை நிறுத்தவேண்டும். ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.500, 1,000-க்காக ஆசைப்படும் வாக்காளர்கள் 5 ஆண்டுகளுக்கு தங்களின் உரிமைகளை பெற முடியாத நிலை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். இந்தநிலை மாறும்வரை நாட்டில் வளர்ச்சி பணிகள் உரிய முறையில் நடக்காது. தேர்தல் நேரத்தில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும், பணம் மற்றும் இலவசம் முதலியவற்றை வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story