கேரளா-சாம்ராஜ்நகர் சுரங்க பாதைக்கு மத்திய, மாநில அரசு அனுமதி மறுப்பு- மந்திரி சோமண்ணா தகவல்


கேரளா-சாம்ராஜ்நகர் சுரங்க பாதைக்கு மத்திய, மாநில அரசு அனுமதி மறுப்பு- மந்திரி சோமண்ணா தகவல்
x

கேரளா-சாம்ராஜ்நகர் இடையே சுரங்க பாதை அமைக்க மத்திய, மாநில அரசு அனுமதி மறுத்துள்ளதாக மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.

கொள்ளேகால்:

சுரங்க பாதைகள்

சாம்ராஜ்நகரில் நேற்று மந்திரி சோமண்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பிளிகிரிரங்கனபெட்டா வனப்பகுதி வழியாக தமிழ்நாட்டிற்கு செல்லும் ரெயில் பாதைக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கனகபுராவில் இருந்து மலவள்ளி, கொள்ளேகால், எலந்தூர், ஈரோடு, சேலத்திற்கு செல்ல முடியும். இதில் 9 கிலோ மீட்டர் சுரங்க பாதையாக அமைய உள்ளது. இதற்கு மேல் சுரங்கம் அமைக்க முடியாது.

ஒரு வேலை மத்திய அரசு அனுமதி அளித்தால், இதைவிட கூடுதலான தூரம் சுரங்கம் அமைக்கப்படும். இதேபோல பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் பாதை அமைய இருக்கிறது. இதற்காக சில மலைகளை குடைந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் சாம்ராஜ்நகரில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் பயணத் தூரம் குறையும்.

அனுமதி மறுப்பு

கேரளா மாநிலம் தலகெரேவில் இருந்து சாம்ராஜ்நகரை இணைக்கும் ரெயில்வே திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. ஏனென்றால் இந்த பாதைகள் வழியாக நாகரஒலே, பந்திப்பூர் பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயம் உள்ளது. ரெயில் பாதை அமைக்க அனுமதி கொடுத்தால் 22 கிலோ மீட்டர் தூரம் வரையிலான வனப்பகுதியை இழக்க நேரிடும். இந்த சுரங்க ரெயில்பாதை அமைக்கப்பட்டால் 70 கிலோ மீட்டர் தூரம் வரை பயண நேரம் குறையும் என்று கூறப்படுகிறது.

இதனால் சுரங்கப்பாதை அமைத்தே ஆகவேண்டும் என்று கேரளா அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு, கேரளா அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளிக்காது. இந்த ரெயில்வே சுரங்கத்திற்காக வனப்பகுதியை இழந்துவிட்டால், மீண்டும் அந்த வனப்பகுதியை கொண்டுவர முடியாது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story