பெண் கற்பழிப்பு வழக்கில் 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்


பெண் கற்பழிப்பு வழக்கில்  2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
x

பெண் கற்பழிப்பு வழக்கில் 2 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து சாம்ராஜ்நகர் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார்.

கொள்ளேகால்,

பெண் கற்பழிப்பு

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவை சேர்ந்த திருமணம் முடிந்த பெண், தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது பெண்ணுக்கும், சாம்ராஜ்நகர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சங்கர் என்ற போலீஸ்காரருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் சங்கர், பெண்ணிடம் திருமண ஆசைக்காட்டி பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் அவர், பெண்ணிடம் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த பெண் சாம்ராஜ்நகர் டவுன் போலீசில் சங்கர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்

அதில் போலீஸ்காரர் சங்கர், பெண்ணிடம் திருமணம் ஆசைவார்த்தை கூறி கற்பழித்தது உறுதியானது. மேலும் இதுதொடர்பான விசாரணை அறிக்கை சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், போலீஸ்காரர் சங்கரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு போலீஸ்காரரான நவீன் என்பவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Next Story