விநாயகர் சதுர்த்தியையொட்டி புனேயில் 5 நாட்கள் மது விற்பனைக்கு தடை- கலெக்டர் உத்தரவு


விநாயகர் சதுர்த்தியையொட்டி  புனேயில் 5 நாட்கள் மது விற்பனைக்கு தடை- கலெக்டர் உத்தரவு
x

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு புனேயில் 5 நாட்கள் மதுபானம் விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

புனே,

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு புனேயில் 5 நாட்கள் மதுபானம் விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

விநாயகர் சதுர்த்தி

கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக களையிழந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடப்பு ஆண்டில் வெகுவிமரிசையாக புனேயில் கொண்டாடப்பட உள்ளது. இதனால் புனேயில் நாளை (புதன்கிழமை) மற்றும் சிலை கரைப்பு தினங்களான வருகிற செப்டம்பர் 4-ந்தேதி, 6-ந்தேதி மற்றும் ஆனந்த சதுர்த்தி தினமான 9-ந்தேதி, அடுத்த நாளான 10-ந் தேதி ஆகிய 5 நாட்கள் மதுபானம் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது பற்றி மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், "இன்று முதல் செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வரை புனேயில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

5 நாட்கள் தடை

இதனை முன்னிட்டு விழாக்காலங்களில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மதுக்கடைகள் 5 நாட்கள் முழுமையாக மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதைத்தவிர சிலை தரிசனம் செய்யும் இடங்கள், கணபதி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள அனைத்து இடங்களில் மதுவிற்பனை கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறும் நபர்கள் 1949-ம் ஆண்டைய விதிகளின் படி தண்டனைக்கு ஆளாக நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story