காலியாக உள்ள புனே, சந்திராப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது - தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல்
காலியாக உள்ள புனே, சந்திராப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மும்பை,
மராட்டியத்தின் புனே, சந்திராபூர் நாடாளுமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதேபோல உத்தரபிரதேசத்தின் காஜிப்பூர் மற்றும் அரியானாவின் அம்பாலா ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்கள் நடைபெற வேண்டும். எனவே மேற்படி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் மிகவும் குறைந்த காலமே மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட முடியும். எனவே இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story