சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய சீரமைப்பு பணிகள் 3½ ஆண்டுகளில் முடிவடையும்- ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய சீரமைப்பு பணிகள்   3½ ஆண்டுகளில் முடிவடையும்- ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
x
தினத்தந்தி 30 Sep 2022 5:15 AM GMT (Updated: 30 Sep 2022 5:16 AM GMT)

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய சீரமைப்பு, நவீனமயமாக்கும் பணிகள் 3½ ஆண்டுகளில் முடிவடையும் என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய சீரமைப்பு, நவீனமயமாக்கும் பணிகள் 3½ ஆண்டுகளில் முடிவடையும் என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

ரூ.10 ஆயிரம் கோடியில் சீரமைப்பு

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும். இங்கு தினந்தோறும் சுமார் 11 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ரெயில் நிலையத்தை சுற்றுலா பயணிகளும் பார்த்து செல்கின்றனர். எப்போதும் கூட்ட நெரிசலுடன் காட்சி அளிக்கும் இந்த ரெயில் நிலையத்தை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

மும்பை சி.எஸ்.எம்.டி. டெல்லி, ஆமதாபாத் ஆகிய ரெயில் நிலையங்கள் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு நேற்று முன்தினம் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.

3½ ஆண்டுகளில் முடியும்

இந்த திட்டத்தின் கீழ் சி.எஸ்.எம்.டி.யில் ருப் பிளாசா அமைக்கப்படுகிறது. மேலும் போதிய இடவசதியுடன் கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு வசதிகள், பயணிகள் காத்திருக்கும் அறை, குழந்தைகள் விளையாடும் இடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. வாகனங்கள் நிறுத்தி வைக்க போதுமான இடவசதி ஏற்படுத்தப்படும்.

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்கான டெண்டர் 10 நாளில் விடப்பட்டு, பணிகள் 3½ ஆண்டுகளில் முடிக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Next Story