தோல் தொற்று நோய் பரவலை தடுக்க கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி- அரசு அறிவிப்பு


தோல் தொற்று நோய் பரவலை தடுக்க கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி- அரசு அறிவிப்பு
x

மராட்டியத்தை கால்நடை லம்பி தோல் தொற்று நோய் பரவலை தடுக்க கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி- அரசு அறிவிப்பு

மும்பை,

மராட்டியத்தை கால்நடை லம்பி தோல் தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை மாநிலத்தில் 43 கால்நடைகள் இந்த நோய்க்கு உயிரிழந்து உள்ளன. மேலும் 2 ஆயிரத்து 664 கால்நடைகள் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தோல் நோய் பரவலை தடுக்க அரசு மாநிலம் முழுவதும் இலவசமாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உள்ளது.

இதுகுறித்து மாநில கால்நடை துறை கமிஷனர் சச்சிந்திர பிராப் சிங் கூறுகையில், "மாநிலத்தில் 1,755 கிராமங்களில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 120 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட எந்த பணமும் கொடுக்க தேவையில்லை. இதற்காக அடுத்த ஒரு வாரத்தில் மாநிலத்திற்கு 50 லட்சம் தடுப்பூசி ஊசி மருந்து கிடைக்கும் " என்றார்.


Next Story