உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து போராடி வெற்றி

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து போராடி வெற்றி
x
தினத்தந்தி 14 Dec 2016 8:09 PM GMT (Updated: 14 Dec 2016 8:09 PM GMT)

மொத்தம் ரூ.6¾ கோடி பரிசுத்தொகைக்கான டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. தரவரிசையில் பின்தங்கிய சாய்னா நேவால் 2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கவுரவமிக்க இந்த போட்டிக்கு தகுதி பெற இயலவில்லை. அதே சமயம் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முதல்முறையாக தகுதி பெற்றார். இந்திய தரப்பில் சிந்து மட்டுமே இந்த சீசனில் உலக சூப்பர் சீரிசில் கால் பதிக்கிறார்.

துபாய், 

இதில் வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுன்ட் ராபின் லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் பி.வி. சிந்து தனது முதலாவது லீக்கில் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார். முதல் செட்டை பறிகொடுத்த சிந்து, அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்று எதிராளியை அடக்கினார். 63 நிமிடங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில் சிந்து 12-21, 21-8, 21-15 என்ற செட் கணக்கில் யமாகுச்சியை தோற்கடித்தார். சிந்து தனது அடுத்த ஆட்டத்தில் இன்று சீனாவின் சன் யுவை எதிர்கொள்கிறார்.

முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின் 18-21, 22-24 என்ற நேர் செட்டில் சீனாவின் சன் யுவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

Next Story