உலக கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய அணி


உலக கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய அணி
x

உலக கோப்பை வில்வித்தை தொடரின் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆண்கள் அணி கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்றது.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ, அமான்ஜித் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி அரையிறுதியில் 232-க்கு 230 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று நடந்த போட்டியில் இந்திய அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தீபிகாகுமாரி ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியைத் தழுவினார்.

இதே போல் மகளிர் அணியும் லீக் போட்டியில் தோல்வி முகத்துடன் வெளியேறிய நிலையில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி தங்கம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டியில இந்திய ஆண்கள் அணி 226-க்கு 221 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியது. இறுதியில் இந்திய அணியிடம் பெற்ற தோல்வியால், கொலம்பியா வெள்ளிப்பதக்கத்தையும், அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியுற்ற அமெரிக்கா மூன்றவாது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.

Next Story