உள் அலங்காரத்தில் கலை வண்ணம்


உள் அலங்காரத்தில் கலை வண்ணம்
x
தினத்தந்தி 4 Oct 2021 2:57 PM GMT (Updated: 4 Oct 2021 2:57 PM GMT)

வீட்டை அழகாக அலங்காரம் செய்து இதயங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் கரீஷ்மா ககோத்தி. அசாமைச் சேர்ந்த இவர் வீட்டு உள் அலங்காரம் செய்வதற்காகவே தன் வாழ்க்கையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தை பருவத்திலேயே பெயிண்டிங்கில் திறமைசாலியாக இருந்தார். அதில் கற்பனையை புகுத்தி தனது படைப்பாற்றல் திறனை வளப்படுத்திக்கொண்டார். டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாகவும், நீச்சல் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்.

“எனக்கு பிடித்த தொழிலைச் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாக இல்லை. அதிகபட்ச தரத்துடன் வீட்டு உள் அலங்காரம் செய்ய வேண்டும் என்பதுதான் என் நிறுவனத்தின் தாரக மந்திரம். ஆரம்பத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். வாடிக்கையாளர்களுக்கு மாதத்தவணை வசதியும் செய்து கொடுத்தேன். இதன் மூலம் என் நிறுவனம் நன்கு வளர்ச்சியடைந்தது. நல்ல வருவாயும் கிடைத்தது.

நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது, உங்களை யாரும் அசைக்க முடியாது. உலகம் முழுவதும் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். வடிவமைப்பாளர்கள் கெல்லி வியர்ஸ்டெல்லரும், ப்ராங் லியாடரும்தான் எனக்கு மானசீக குருவாக உள்ளனர். புதிய வடிவமைப்பாளர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றேன்” என்றார்.

இவர் வீட்டு உள் அலங்கார வடிவமைப்பு தொழிலை இந்தியாவுக்குள் மட்டுமின்றி ஐரோப்பாவுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். வீட்டு உள் அலங்காரம் தொடர்பான பள்ளியும் ஆரம்பித்துள்ளார்.


Next Story