நடிகைகளுக்கு விருந்தளிக்கும் பிரபாஸ்


நடிகைகளுக்கு விருந்தளிக்கும் பிரபாஸ்
x
தினத்தந்தி 4 Oct 2021 3:32 PM GMT (Updated: 4 Oct 2021 3:32 PM GMT)

சினிமா உலகுக்கு 2002-ம் ஆண்டு அறிமுகமானவர், பிரபாஸ். 2014-ம் ஆண்டு வரை தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து வந்த இவர், பாகுபலி திரைப்படத்திற்குப் பின்னர், இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இந்தப் படத்தின் வெற்றியின் காரணமாக, அவரது சினிமா உலகம் பரந்து விரிந்ததாக மாறிவிட்டது. அவரை வைத்து படம் இயக்கினால், இந்தியா முழுவதும் வெளியிட்டு பணம் பார்க்கலாம் என்ற முடிவுக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வந்துவிட்டனர்.

எனவேதான் பாகுபலிக்கு அடுத்ததாக ‘சாஹோ’ என்ற திரைப்படத்தில் நடித்தார், பிரபாஸ். அடுத்த ஆண்டு தொடர்ச்சியாக அவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. பொங்கல் வெளி யீடாக ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படமும், ஏப்ரல் வெளியீடாக ‘சலார்’ திரைப்படமும், ஆகஸ்டு மாதத்தில் ‘ஆதிபுரூஸ்’ என்ற திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதில் ‘சலார்’ என்ற திரைப்படத்தை, கே.ஜி.எப். திரைப்படத்தை இயக்கிய, பிரசாந்த் நீல் இயக்குகிறார்.

ஒேர நேரத்தில் பல இந்திய மொழிகளில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பான் இந்தியா திரைப்படங்கள் எனப்படும். இது போன்ற படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு, அதில் நடிக்கும் நடிகைகளுக்கு, படப்பிடிப்பு நடைபெறும் ஏதாவது ஒரு தினத்தில், சுவையான மதிய உணவு அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஏற்கனவே ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, ‘சலார்’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு உணவுகளை அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகையான கரீனாகபூருக்கு, மதிய உணவாக பிரியாணியை அனுப்பிவைத்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட கரீனாகபூரும், அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பிரபாசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அது சரி.. ‘கரீனாகபூர், பிரபாசுடன் எந்த படத்தில் நடிக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? கரீனா, பிரபாசுடன் நடிக்கவில்லை. ஆனால், கரீனாகபூரின் கணவரான சயீப் அலிகான், ‘ஆதி புரூஸ்’ திரைப்படத்தில், பிரபாசுடன் நடித்து வரு கிறார்.

‘ஆதிபுருஸ்’ திரைப்படம், ராமாயண காவியத்தின் ஒரு பகுதியை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.500 கோடியில் உருவாகி வரும் இந்தப்படத்தில், ராமர் வேடத்தில் பிரபாசும், சீதாதேவி வேடத்தில் கீர்த்தி சனானும், இலங்கை அரசன் ராவணன் வேடத்தில் சயீப் அலிகானும் நடிக்கிறார்கள்.


Next Story