ெதாழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


ெதாழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

மனைவியை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மனைவியை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கொலை செய்ய முயற்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஒச்சம்மாள் (43). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக முன் விரோதமும் இருந்துள்ளது. இந்தநிலையில் பாலமுருகன், ஒச்சம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் காயமடைந்த ஒச்சம்மாள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக ஒச்சம்மாளின் சகோதரர் சுப்பிரமணி இருக்கன்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற பாலமுருகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story