சாலை மறியலில் ஈடுபட்ட மூட்டா அமைப்பினர் 119 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட மூட்டா அமைப்பினர் 119 பேர் கைது
x

பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட மூட்டா அமைப்பினர் 119 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் 2 தனியார் கல்லூரிகள் அரசின் ஆணைகளை முறையாக அமல்படுத்தவில்லை என்று கூறி மூட்டா அமைப்பினர் பாளையங்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் நசீர் அகமது, கோமதிநாயகம், சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பெருமாள், சுடலைராஜ், வக்கீல் பழனி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 119 பேரை கைது செய்து நூற்றாண்டு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story